உள்நாடு

மிரிஹான கலவரம் : 150க்கும் மேற்பட்டவர்களிடம் CID வாக்குமூலம்

(UTV | கொழும்பு) – மிரிஹான போராட்டம் தொடர்பில் 150க்கும் மேற்பட்டவர்களிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நுகேகொடை, மிரிஹான பிரதேசத்தில் கடந்த 31ஆம் திகதி ஜனாதிபதியின் வாசஸ்தலத்தின் நுழைவாயிலை மறித்து போராட்டம் நடத்தப்பட்டது.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு கங்கொடவில நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட 21 பேர் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஏனைய 6 பேரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதுடன், அன்றைய தினம் அடையாள அணிவகுப்பில் ஆஜர்படுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

மேலும் 2  பேர் பூரணமாக குணமடைந்தனர்

 தனுஷ்க்க குணதிலக்க பிணை நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ளது

ஜனாதிபதி செயலாளராக காமினி செனரத்