அரசியல்உள்நாடு

மியன்மாரில் நடந்த நிலநடுக்கத்திற்கு சஜித் பிரேமதாச கவலை தெரிவிப்பு

மியன்மாரில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தில் ஏராளமான உயிர்கள் பலியாகியுள்ளன. ஏராளமான சொத்துக்களும் அழிந்துள்ளன.

இந்த அவல நிலையை எதிர்கொண்ட மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இந்த அனர்த்தத்தில் காணாமல் போன மக்கள் மற்றும் விலங்குகளின் உயிர்களை பாதுகாக்க உரிய தரப்புகளுக்கு இயலுமை கிட்டட்டும் என பிரார்த்திக்கின்றேன்.

இம்மக்களுக்கு இயன்ற அதிகபட்ச உதவிகளையும், நிவாரணங்களையும், அவசர மனிதாபிமான மீட்பு நடவடிக்கைகளையும் பெற்றுக் கொடுக்குமாறு உலகின் செல்வந்த நாடுகளிடம் கௌரவத்துடன் கேட்டுக்கொள்கின்றன என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

Related posts

நோர்வே தூதுவரை சந்தித்த சாணக்கியன் மற்றும் சுமந்திரன்

editor

எதிர்வரும் 06ஆம் திகதி அன்டிஜன் பரிசோதனை

மன்னாரில் புதிய காற்றாலை மின் நிலையத்தை அமைக்க திட்டம்!