வணிகம்

மியன்மாரின் தற்போதைய நிலைமை குறித்து உலக வங்கி கவலை

(UTV |  வொஷிங்டன்) – மியன்மாரின் தற்போதைய நிலைமை மற்றும் இராணுவம் அதிகாரத்தை கையகப்படுத்துவது குறித்து உலக வங்கி கவலை வெளியிட்டுள்ளது.

அத்துடன் இந்நிகழ்வுகள் நாட்டின் மாற்றம் மற்றும் அதன் வளர்ச்சி வாய்ப்புகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளது.

இது குறித்து உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில்;

எங்கள் ஊழியர்கள் மற்றும் கூட்டாளர்கள் உட்பட மியன்மாரில் உள்ள மக்களின் பாதுகாப்பு மற்றும் நாட்டின் பாதுகாப்பு குறித்து நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம். மேலும் மியன்மாருக்குள்ளும் வெளி உலகத்துடனும் தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளமையினால் கலக்கமடைகிறோம் என குறிப்பிட்டுள்ளது.

கடந்த பத்தாண்டுகளாக மியன்மாரின் ஜனநாயகத்திற்கான மாற்றத்தை ஆதரிப்பதில் ஒரு உறுதியான பங்காளியாக இருந்ததாகவும், பரந்த அடிப்படையிலான நிலையான வளர்ச்சியை அடைவதற்கான அதன் முயற்சிகள் மற்றும் சமூக சேர்க்கை அதிகரித்திருப்பதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

வங்கியின் வலைத்தளம் 2020 ஆம் ஆண்டில் மியன்மாருக்கு உலக வங்கி கடன் வழங்குவதில் 900 மில்லியன் அமெரிக்க டொலர்களையும், 2017 இல் 616 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் பட்டியலிட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

உருளைக் கிழங்கிற்கான இறக்குமதி வரி விரைவில் அதிகரிக்கப்படும்

தேயிலை, கறுவா, இறப்பர் உற்பத்தியை விரிவுப்படுத்த விஷேட திட்டம்

ஆசியாவின் முதலாவது சுற்றுலாத்திட்டம் 2018 இல் ஆரம்பம்