உள்நாடு

மின் தடை – விசாரணைக்காக குழு நியமனம்

(UTV | கொழும்பு) -மின் விநியோகம் தடைப்பட்டமை தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு இன்று(18) காலை ஒன்றுகூட உள்ளது.

பேராசிரியர் ராஹூல அதலகேயின் தலைமையில் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேரா தெரிவித்துள்ளார்.

மின் விநியோகம் தடைப்பட்டமை குறித்து ஆராய்ந்து குறித்த குழுவின் அறிக்கை ஒருவார காலத்திற்குள் வழங்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாடாளவிய ரீதியில் தடைப்பட்ட மின்சார விநியோகம் நேற்றிரவு(17) வழமைக்கு திரும்பியதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

அமைச்சர் நஸீர் பயணித்த ஹெலி அவசரமாக தரையிறக்கம் !

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2674 ஆக உயர்வு

யாழ்.மாணவி கொலை – கணவனுக்கு விளக்கமறியல்