உள்நாடு

மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கவனஈர்ப்பு போராட்டம்

(UTV | கொழும்பு) –   மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கவனஈர்ப்பு போராட்டம்

மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (17) எரிசக்தி அமைச்சுக்கு முன்பாக மக்கள் குழுவொன்று கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

“மின்கட்டண அதிகரிப்பை உடனடியாக இடைநிறுத்துங்கள்” என்ற கோசத்தின் கீழ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினர், அமைச்சின் பிரதான வாயிலை மூடுமாறு பதாதை ஒன்றையும் காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரதான வாயிலை முற்றுகையிட வேண்டாம் என்றும், அப்படி செய்தால் கைது செய்யப்படுவார்கள் என்றும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றுள்ளனர்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ராணியின் மறைவுக்கு, உயர்ஸ்தானிகராலயத்தில் இரங்கல் புத்தகத்தில் ஜனாதிபதி கையெழுத்திட்டார்

இரட்டை குழந்தைகளை விற்ற இளம் தாய் கைது!

கஞ்சிப்பானை இம்ரானின் தந்தை மீது தாக்குதல்