உள்நாடு

மின் கட்டணங்களை குறைக்க முடியும் – பிரதமர்

அடுத்த இரண்டு மாதங்களுக்குள் மின் கட்டணங்களை குறைக்க முடியும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொலன்னாவை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உமா ஓயா மின்னுற்பத்தி திட்டத்தினூடாக தேசிய மின் கட்டமைப்பிற்கு 120 மெகாவாட் மேலதிக மின்சாரம் கிடைக்கின்றமை கட்டணக் குறைப்பு விடயத்தில் நேரடி தாக்கம் செலுத்துவதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கமைய, மின் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பில் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என பிரதமர் தெரிவித்துள்ளார்.  

Related posts

இலங்கை வந்தடைந்தார் எஸ். ஜெய்சங்கர்

editor

(United Arab Emirates) ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள இலங்கையர்களுக்கான முக்கிய அறிவிப்பு

சற்றுமுன் புதிதாக 9 பேருக்கு கொரோனா