அரசியல்உள்நாடு

மின்வெட்டுக்கு குரங்கையும், கடந்த அரசாங்கங்களை பழி சுமத்திய அரசாங்கம் – சஜித் பிரேமதாச

மின்வெட்டுக்கு முதலில் ஒரு குரங்கு மீது பழி சுமத்திய அரசாங்கம், பின்னர் அதனை கடந்த அரசாங்கங்கள் மீது சுமத்தியதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்வெட்டு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது X கணக்கில் பதிவொன்றை இட்டு இதனை தெரிவித்துள்ளார்.

இருப்பினும், தற்போதைய அரசாங்கம் உண்மையான பிரச்சினை என்ன என்பதை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சூரிய மின் உற்பத்தியை அதிகரிக்கத் தவறியதும், குறைந்த தேவை காலங்களை நிர்வகிக்காத பலவீனமான நிர்வாகமும் மின் தடைக்கு முக்கிய காரணம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

வீடியோ | பதவிக்காலம் நிறைவடைந்து விடைபெறும் அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் பிரதமர் ஹரிணியை சந்தித்தார்

editor

கரும்பு உற்பத்தியாளர்கள் அறுவடை செய்ய முடியாமல் திண்டாட்டம் – வட்டியில்லா கடன் திட்டத்தை வழங்குமாறு கோரிக்கை

editor

இலங்கை கடற்பரப்பில் 12 இந்திய மீனவர்கள் கைது

editor