உள்நாடு

மின்சார சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி வெளியானது

மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதியின் கட்டளைக்கு அமைய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் கையொப்பத்துடன் நேற்று (21) குறித்த வர்த்தமானி அறிவித்தல் வௌியாகியுள்ளது.

இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்கள், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் கொள்முதல் மற்றும் டெண்டர் செயல்முறைகளில் விலகி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

பாராளுமன்றத் தேர்தல் – வாக்குப்பதிவு நிறைவு

editor

சபுகஸ்கந்தவில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த எண்ணெய் சுத்திகரிப்புச் செயற்பாடுகள் மீளவும்

சட்டவிரோத மதுபான போத்தல்கள் ஏல விற்பனை!