உள்நாடுசூடான செய்திகள் 1

மின்சார கம்பியில் சிக்கி இரண்டு பேர் உயிரிழப்பு

உரகஸ்மன்ஹந்திய பொலிஸ் பிரிவிக்குட்பட்ட அம்பாகஹா சந்திக்கருகிலுள்ள வயலில் சட்டவிரோதமாக விரிக்கப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி இன்று (12) இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் உரகஸ்மன்ஹந்திய பகுதியைச் சேர்ந்த 39 மற்றும் 46 வயதானவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

அங்கீகரிக்கப்படாத மின்சார கம்பிகளைப் பொருத்தியதாக சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Related posts

தையிட்டி விகாரை பிரச்சினைக்கு உடனடியாக நேர்மையுடன் தீர்வு காண ஜனாதிபதி அநுர தயாரா ? கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி கேள்வி

editor

இலங்கையின் மருந்து உற்பத்தியில் முதலீடு செய்வதற்கு கியூபா கவனம்

editor

சிறப்பாக செயல்பட்ட நிறுவனங்களுக்கு ஜனாதிபதியின் தலைமையில் விருது