உள்நாடுபிராந்தியம்

மின்சாரம் தாக்கி 17 வயது இளைஞன் பலி – யாழ்ப்பாணத்தில் சோகம்

யாழ்ப்பாணம் ஆறுகால்மடம் பகுதியில் நேற்று (16) மாலை மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

யாழ்ப்பாணம் சங்கரத்தை பகுதியைச் சேர்ந்த 17 வயதான இளைஞரே இவ்வாறு உயிரிழந்தார்.

யாழ்ப்பாணம் ஆறுகால்மடம் பகுதியில் காணப்படும் வாகன திருத்தும் இடத்தில் பணியில் ஈடுபட்டிருந்த போது மேற்படி இளைஞரை மின்சாரம் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது

மரணமடைந்துள்ள இளைஞரின் சடலம் தற்போது யாழ் போதனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

-பிரதீபன்

Related posts

திருப்பதி பயணத்தில் பிரதமர்

டயனா கமகே மீதான தாக்குதல் – ஒழுக்காற்று நடவடிக்கை!

கொழும்பு வரை அலுவலக போக்குவரத்து சேவையை ஆரம்பிக்க தீர்மானம்