உள்நாடு

மிதிகம விபத்தில் இரு வெளிநாட்டவர் பலி – கைது செய்யப்பட்ட சாரதிகள்

(UTV | கொழும்பு) –

மாத்தறை – கொழும்பு வீதியின் மிதிகம பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் வெளிநாட்டுப் பிரஜைகள் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பஸ் மற்றும் லொறியின் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் பஸ் மற்றும் லொறி மோதிய வெளிநாட்டவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் ஒருவர் ரஷ்யப் பிரஜை என தெரிய வந்துள்ளது.

இந்த இரு வெளிநாட்டவர்களும் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ்ஸுடன் மோதிய நிலையில் எதிரே வந்த லொறியும் அவர்கள் மீது மோதியது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிதிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மதுபோதையுடன் வாகன செலுத்துபவர்களை கைது செய்ய விசேட நடவடிக்கை

மருத்துவ ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் !

கொரோனா மரணங்கள் : 34 ஆக உயர்வு