உள்நாடு

மிதிகம ரயில் கடவையில் விபத்து – வெளிநாட்டு பயணி உட்பட இருவர் காயம்

(UTV | கொழும்பு) –

மிதிகம ரயில் கடவையில் இன்று இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். பெலியத்தையிலிருந்து மாகோ நோக்கி சென்றுக் கொண்டிருந்த ரஜரட்ட ரெஜின கடுகதி ரயில் கார் ஒன்றை மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின்போது காரில் இரண்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பயணித்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் காயமடைந்த உள்ளூர் சுற்றுலா வழிகாட்டி மற்றும் ஒரு வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ரயில் செல்வதற்கான சமிக்ஞை போடப்பட்டிருந்த நிலையில் குறித்த கார் பாதுகாப்பற்ற முறையில் பயணித்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டவர்கள் கலந்துகொள்ளும் எந்த நிகழ்வுக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி பொறுப்பல்ல..

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : இரு நாள் விவாதம்

ஜனாதிபதி மற்றும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சருக்கு இடையில் கலந்துரையாடல்