அரசியல்உள்நாடு

மிக விரைவில் சுகாதார அமைச்சர் யாழ் வைத்தியசாலைக்கு வருவார் – அமைச்சர் சந்திரசேகர் நம்பிக்கை

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் மிக விரைவில் நேரில் விஜயம் மேற்கொண்டு, சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொள்வார் என கடற்தொழில் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

யாழ் . போதனா வைத்தியசாலைக்கு இன்றைய தினம் சனிக்கிழமை (23) நேரில் விஜயம் மேற்கொண்ட கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வைத்தியசாலையின் சேவை நிலைமைகளை நேரில் ஆராய்ந்தார்.

வைத்தியசாலையின் வளர்ச்சி மற்றும் சேவைகளை மேம்படுத்துவதற்கான தேவைகளை வைத்திசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சாத்திய மூர்த்தியிடம் நேரடியாக கேட்டறிந்த அவர், சாதகமான மாற்றங்களை கொண்டுவர சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடி, தன்னால் முடிந்த எல்லாவற்றையும் மேற்கொள்ளவதாக உறுதி அளித்தார்.

அத்துடன், சுகாதார அமைச்சர் வைத்தியர் நளின்த ஜயதிஸ்ஸ விரைவில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் இதன் மூலம் சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கான மேலும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Related posts

ஜனாதிபதி- மலேசிய பிரதமருக்கிடையில் சந்திப்பு.

இலங்கையின் கடல் எல்லையில் கடும் பாதுகாப்பு

ஒரு இலட்சத்து 73 ஆயிரத்து 444 பேர் பல்கலைக்கழகத்துக்கு தகுதி