அரசியல்உள்நாடு

மிக மோசமான காலநிலை – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் – பாரிய அச்சுறுத்தலான நிலை இல்லை – வளிமண்டலவியல் திணைக்களம் – காலநிலை முன்னறிவிப்பில் முரண்பாடு என்கிறார் நளின் பண்டார எம்.பி

நாட்டில் நாளையும் (29), நாளை மறுதினமும் (30) மிகமோசமான காலநிலை நிலவும் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

ஆனால் பாரிய அச்சுறுத்தலான நிலை இல்லை என்று வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிடுகிறது.

காலநிலை தொடர்பில் இவ்விரு தரப்பினருக்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுகின்றன என்று ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த அறிவுறுத்தலை அரசாங்கம் அலட்சியப்படுத்தியதன் விளைவை நாட்டு மக்கள் எதிர்கொண்டார்கள்.

அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் தித்வா சூறாவளி தாக்கத்தால் பாரிய உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருக்காது.

நாட்டில் நாளை (திங்கட்கிழமை), நாளை மறுதினம் (செவ்வாய்க்கிழமை) அசாதாரண காலநிலை நிலவும் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

ஆனால் அவ்வாறு பாரிய அச்சுறுத்தல் ஏதும் கிடையாது. மழையுடனான காலநிலை மாத்திரமே நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

காலநிலை தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிடுவது உண்மையா அல்லது வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிடுவது உண்மையா, இது அரச நிறுவனங்களுக்கிடையிலான முரண்பாட்டையும், பரஸ்பர வேறுபாட்டையுமே வெளிப்படுத்துகிறது என்றார்.

-இராஜதுரை ஹஷான்

Related posts

ஜனாதிபதி அநுர எனக்கு நல்ல நண்பர்தான் – அரசுக்கு எதிரான பேரணியில் பங்கேற்பதில்லை – மனோ கணேசன் எம்.பி

editor

ஹர்ஷ டி சில்வா – திலும் அமுனுகம ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு

ஆட்கடத்தல் மனித குலத்திற்கு எதிரான குற்றமாகும் என்கிறார் – பாதுகாப்புச் செயலாளர்!