வகைப்படுத்தப்படாத

மிக அரிய வகை உயிரினமான கருஞ்சிறுத்தை ஒன்று கென்யாவில் கண்டுபிடிப்பு

ஆப்பிரிக்க காடுகளில் 100 ஆண்டுகளில் முதன்முறையாக கருஞ்சிறுத்தை இருப்பது படம் பிடிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த வன உயிரின புகைப்படக் கலைஞரான வில்பரட் லூக்காஸ் என்பவர் கென்யாவின் வனப்பகுதியில் புகைப்படம் எடுத்து வந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் லைக்கெப்பியா என்ற இடத்தில் அரிய மற்றும் அபூர்வ வகையான கருஞ்சிறுத்தை நடமாட்டம் இருப்பதை அறிந்த அவர் குறிப்பிட்ட இடங்களில் தானியங்கி கேமராக்களை பொருத்தினார்.

கென்யாவின் வனப்பகுதியில் சுற்றித்திரிந்த கருஞ்சிறுத்தை பவுர்ணமி வெளிச்சத்தில் கேமராவின் குறுக்கே சென்ற கருஞ்சிறுத்தை கேமராவுக்குள் படம் பிடிக்கப்பட்டது. கடந்த 100 ஆண்டுகளில் ஆப்பிரிக்க வனப்பகுதியில் படம்பிடிக்கப்பட்ட முதல் கருஞ்சிறுத்தை இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

நாளை விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்

சோலர் மின் கொடுப்பனவு உயர்வு : மின்சார சபை

editor

US launches inquiry into French plan to tax tech giants