அரசியல்உள்நாடு

மாவை சேனாதிராசாவின் இறுதிச்சடங்கு தொடர்பான அறிவிப்பு

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராசாவின் இறுதிச்சடங்கு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதன்படி எதிர்வரும் ஞாயிற்றுகிழமை (02) பிற்பகல் 3 மணிக்கு யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த மாவை.சோ.சேனாதிராஜாவின் புகழுடல், அரசடி வீதி, மாவிட்டபுரம், தெல்லிப்பழையிலுள்ள அவரது இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

மாவை சேனாதிராஜா (82) உடல் நலக்குறைவால் யாழ். போதனைா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

Related posts

கொவிட் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்ய எதிர்ப்பு [VIDEO]

முட்டை விலை தொடர்பில் நாளை மீளாய்வு

கோட்டாபய ராபஜக்சவை ஜனாதிபதி பதவியில் அமர்த்தவே உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் – சந்திரிக்கா