உள்நாடு

மாவீரர் துயிலுமில்ல காணியை விடுவிக்க கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்!

(UTV | கொழும்பு) –

கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்தில் தேராவில் பகுதியில் அமைந்துள்ள மாவீரர் தூயிலுமில்ல காணியினை விடுவிக்க கோரி மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

யுத்தம் முடிவடைந்து 14 வருடம் கடந்த நிலையிலும் மாவீரர் துயிலுமில்லத்துக்குரிய காணி இராணுவத்தினரால் விடுவிக்கப்படவில்லை. மாவீரர்களின் பெற்றோர் தமது பிள்ளைகளின் கல்லறைகளில் அஞ்சலி செலுத்த வேண்டும் என தெரிவித்து குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன் போது குறித்த ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன், முன்னாள் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேலமாலிதன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதன் போது மாவீரர் துயிலுமில்ல அமைவிடம் முன்பாக மாவீரரின் பெற்றேர் கற்பூரம் தீபம் காண்பித்து வழிபட்டனர்.

       

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

13 இன் ஊடா தமிழீழத்தை ஒருபோதும் பெற்றுக் கொள்ள முடியாது – சரத் வீரசேகர.

அரபு நாடுகளின் அவசர கூட்டத்திற்கு சவுதி அரேபியா அழைப்பு!

முச்சக்கர வண்டிகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பில் வரைபு சமர்ப்பித்து!