மாவனெல்லை – ரம்புக்கனை வீதியில் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்றின் மீது இன்று (23) இரவு பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் விபத்து சம்பவித்துள்ளது.
தலகொல்ல பகுதியிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
மரம் முறிந்து விழுந்ததினால் முச்சக்கர வண்டியில் இருந்தவர்கள் உள்ளே சிக்கிய நிலையில், அதிலிருந்த சிறுவன் மீட்கப்பட்டு தற்போது மாவனெல்லை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிக்கியுள்ள ஏனையவர்களை மீட்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த விபத்து காரணமாக அந்த வீதியின் ஊடான போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
