வகைப்படுத்தப்படாத

மாவட்ட மட்டத்தில் நல்லிணக்க குழுக்கள்

(UDHAYAM, COLOMBO) – நாட்டின் தற்போதைய நிலையை கருத்திற் கொண்டு மாவட்ட மட்டத்தில் நல்லிணக்க குழுக்களை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஆரசாங்க தகவல் திணைக்களத்தின் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சரும் அமைச்சரவை துணைபபேச்சாளருமான கயந்த கருணாதிலக இது தொடர்பாக தெரிவிக்கையில் ,

நாட்டின் தற்போதைய கருத்திற்கொண்டு மாவட்ட செயலாளரை தலைமையில் , மதத்தலைவர்கள், பிரதேச பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் தெரிவு செய்யப்பட்ட வேறு பிரதிநிதிகளுடன் கூடிய மாவட்ட மட்டத்திலான நல்லிணக்க குழுக்களை அமைப்பதற்கு அரசாங்கம் தெரிவித்துள்ளதாக தெரிவித்தார்.

மதங்களிடையேயும், இனங்களிடையேயும் மேற்கொள்ளப்படும் மோதல்களை தீர்த்து வைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு குறித்த குழுவுக்கு அதிகாரத்தை வழங்குவதற்கும், மாவட்ட குழுக்களுக்கு மேலதிகமாக தேசிய நல்லிணக்க குழுவொன்றை நியமிப்பதற்கும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க குழுவொன்றை நியமிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சர் எனும் ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சரும் அமைச்சரவை துணைபபேச்சாளருமான கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

Related posts

Sri Lanka all set for Expo 2020 Dubai

Sri Lanka likely to receive light showers today

ජනපති යළි දිවයිනට