மாவடிவேம்பு பிரதான வீதியில் 21.01.2026 இன்று ஒரே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனரும் முச்சக்கரவண்டி சாரதியும் பலத்த காயத்துக்குள்ளானர்.
காயமடைந்த இருவரும் மக்கள் உதவியுடன் அருகிலுள்ள மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றர்.
-விஷ்ணு
