உள்நாடு

மாளிகாவத்தை பகுதியில் உள்ள மதரஸாவில் கடமை புரியும் 2 மௌலவிகள் கைது

மாளிகாவத்தை பகுதியில் உள்ள மதரஸா ஒன்றில் கடமை புரியும் 2 மௌலவிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த இரண்டு மௌலவிகளும் நேற்று (19) கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்தது.

மாளிகாவத்தை பகுதியில் உள்ள மதரஸா ஒன்றில் கல்வி பயிலும் 13 வயதான மாணவன் ஒருவனை கடுமையாக பிரம்பினால் தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டத்தை அடுத்து, எதிர்வரும் 26ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாளிகாவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ஒரு கிலோவிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளுடன் பாடசாலையில் அதிபர் கைது

editor

ஊரடங்கை அறிவிக்கும் நோக்கமில்லை – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு

editor

இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும்

editor