உள்நாடு

மாலையில் இடியுடன் கூடிய மழை

(UTV | கொழும்பு) – நாட்டின் பல பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வடக்கு, வடமேற்கு மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்கள் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Related posts

நாளை முதல் தனியார் பேருந்துகள் மட்டு

முகக்கவசம் அணியாத 1,831 பேருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

“சர்வதேச சமூகம் விரும்பும் விதத்தில் நாங்கள் கைதிகள் பற்றி முடிவுகளை எடுப்பதில்லை”