அரசியல்உள்நாடு

மாலைதீவில் இருந்து இலங்கை திரும்பினார் நாமல் எம்.பி

இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, நேற்று (28) தம்மீது கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், மாலைதீவில் இருந்து இலங்கை திரும்பியுள்ளார்.

அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று (28) நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்தது.

அவர் திட்டமிடப்பட்ட விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நாமல் ராஜபக்ஷ மாலைதீவில் ஒரு நிகழ்வில் பங்கேற்கச் சென்றிருந்ததாக அப்போது தெரிவிக்கப்பட்டிருந்தது.

Related posts

கொழும்பில் 16 மணிநேர நீர் வெட்டு!

அரசாங்கத்துக்கு எதிராக பேசுபவர்கள் CIDக்கு அழைக்கப்படுகிறார்கள் – விமல் வீரவன்ச

editor

சீராகும் களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையம்