அரசியல்உள்நாடு

மாலினி பொன்சேகாவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர இறுதி அஞ்சலி

மறைந்த புகழ் பெற்ற நடிகை மாலினி பொன்சேகாவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்றிரவு (25) இறுதி அஞ்சலி செலுத்தினார்.

பூதவுடல் வைக்கப்பட்டுள்ள தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தரங்கனி மண்டபத்திற்கு சென்ற ஜனாதிபதி, பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.

இதேவேளை, மறைந்த புகழ் பெற்ற நடிகை மாலினி பொன்சேகாவின் இறுதிக் கிரியை நாளை (26) சுதந்திர சதுக்கத்தில் அரச கௌரவத்துடன் இடம்பெறவுள்ளது.

பழம்பெரும் நடிகை மாலினி பொன்சேகா, கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (24) அதிகாலை காலமானார்.

1947ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி பிறந்த அவர், தனது 78ஆவது வயதில் காலமானார்.

இந்நிலையில், அவரது பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக நேற்று முதல் பெருந்திரளான மக்கள் வருகைதந்த வண்ணம் உள்ளனர்.

Related posts

பாத்திமா முனவ்வராவுடைய ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது

‘பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள கடன் மறுசீரமைப்பு திட்டம் வெற்றியடைய வேண்டும்’

மேலும் 826 கடற்படையினர் குணமடைந்தனர்