சூடான செய்திகள் 1

மாத்தறை, கிரிந்த வன்முறை – 04 பொலிசார் பணி இடைநிறுத்தம்

(UTVNEWS|COLOMBO) – மாத்தறை, கிரிந்த பகுதியில் கடந்த 26 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைகளை தடுக்க தவறிய குற்றச்சாட்டில் நான்கு பொலிசார் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த 26ஆம் திகதி இரவு இடம்பெற்ற குறித்த வன்முறைகள் ஏற்படுவதை தடுக்க தவறியமை, கடமைகளை சரிவர செய்யாமை, சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்காமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் ஹக்மன பொலிஸ் நிலையத்தின் 4 பொலிசார் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

உணவு ஒவ்வாமை காரணமாக 54 சிறுவர்கள் மருத்துவமனையில்

இந்தியா தலையீடு செய்யாது என்று நம்புகிறேன்-மஹிந்த ராஜபக்ஷ

ஞானசார தேரருக்கு வெளியில் இருந்து உணவை வழங்குவதற்கு அனுமதி கோரல்