சூடான செய்திகள் 1

மாணவர்களின் பாதுகாப்புக்கு புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம்

(UTV|COLOMBO)  நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள நிலைமையில் சிறுவர்களுக்கு உதவுவதற்காக 1929 தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தி இருப்பதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் எம்.எம். அபேவர்த்தன தெரிவித்தார்.

மேலும் பாடசாலை இரண்டாம் தவணை நடவடிக்கைகளுக்காக ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து விடுக்கப்பட்ட அழைப்புக்கு அமைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் பொழுது அந்த பகுதி தொடர்பில் விழிப்புடன் மாணவர்கள் செயற்பட வேண்டும் என்று அதிகார சபை தலைவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

 

 

Related posts

பேருவளை பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட 13 பேர் கைது

அ.இ.ம. காங்கிரஸ், சபாநாயகரின் தீர்மானத்தினை வரவேற்றது

இத்தாலியில் கொவிட் – 19; முதியவர் பலி