உள்நாடுபிராந்தியம்

மாணவனின் கன்னத்தில் அறைந்தவர் கைது!

மாணவன் ஒருவனின் கன்னத்தில் அறைந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் வியாழக்கிழமை (3) வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டப் பாடசாலை ஒன்றில் முதலாம் தரத்திலும் ஐந்தாம் தரத்திலும் கல்வி கற்கும் இரு மாணவர்களுக்கு மத்தியில் சிறு சிறுவர் முரண்பாடு ஒன்று ஏற்பட்டுள்ளது.

இதனை அவதானித்துக் கொண்டிருந்த 45 வயது மதிக்கத்தக்க முதலாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவனின் தந்தை ஐந்தாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவனுக்கு கன்னத்தில் பலமாக அறைந்துள்ளார்.

இவ்வாறு தாக்குதலுக்குள்ளான மாணவன் சிகிச்சைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், தாக்கிய நபரை வாழைச்சேனை பொலிஸார் உடனடியாக கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

-எச்.எம்.எம்.பர்ஸான்

Related posts

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 712 ஆக அதிகரிப்பு

புத்தளத்தில் மனித-யானை மோதலை தடுக்கும் புதிய சுற்றாடல் பாதுகாப்புத் திட்டம் ஆரம்பம்

editor

உயர்தரப் பரீட்சை நாளை ஆரம்பம் – சகல ஏற்பாடுகளும் பூர்த்தி

editor