சூடான செய்திகள் 1

மஹிந்த ராஜபக்ஷ சீனா பறந்தார்!

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று வியாழக்கிழமை (27) காலை சீனாவிற்கு சென்றுள்ளார்.

சீனாவின் அமைதியான சகவாழ்வுக்கான ஐந்து கோட்பாடுகள் வெளியிடப்பட்டதன் 70வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் மாநாட்டில் கலந்து கொள்ள அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் விடுத்த அழைப்பை ஏற்று மஹிந்த ராஜபக்ஷ அங்கு சென்றுள்ளார்.

இந்த மாநாடு சீனாவின் தலைநகர் பீஜிங்கில் நாளை வெள்ளிக்கிழமை (28)  நடைபெறவுள்ளது.

இந்த விஜயத்தில் மஹிந்த ராஜபக்ஷ சீனப் பிரதமர் லீ கியாங் மற்றும் வெளிவிவகார அமைச்சர் வாங் யீ ஆகியோரை சந்தித்து கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த மாநாட்டில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், பிரதமர் லீ கியாங், வெளிவிவகார அமைச்சர் வாங் யீ மற்றும் பல சீன கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

 

Related posts

சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் இன்று(28) வெளியீடு…

ஹெரோயின் தொகையுடன் இரண்டு பேர் கைது

உயர் பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம்