உள்நாடு

மஹிந்த- பங்காளிகள் பேச்சு இணக்கப்பாடின்றி நிறைவு

(UTV | கொழும்பு) –  அரசின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பங்காளி கட்சிகளின் தலைவர்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்று (23) இடம்பெற்ற பேச்சுவார்த்தை எவ்விதமான இணக்கப்பாடுகளும் இன்றி நிறைவடைந்துள்ளது.

கெரவலப்பிட்டிய யுகதனவ் மின் ஆலையில் 40 சதவீதமானவற்றை அமெரிக்காவின் நிறுவனமொன்றுக்கு வழங்கப்படுவதற்கான ஒப்பந்தம் கைச்சாதிடப்பட்டமை தொடர்பில் இந்தப் ​பேச்சுவார்த்தை நடைபெற்றது.

யுகதனவ் மின் ஆலை ​தொடர்பில் பதிலளித்த நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ, இந்த முதலீட்டில் 250 ​அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்யப்படவுள்ளன. இதனால் நாட்டுக்கு நன்மைக்கிடைக்கும் என எடுத்துரைத்தார்.

எனினும், அவருடைய பதிலில் பங்காளிகள் திருப்தியடையவில்லை. அதனால், இணக்கப்பாடு இன்றி நிறைவடைந்துவிட்டது.

Related posts

டயானா கமகேவுக்கு எதிராக இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு

பாத்திமா மரணம் : தாயும் பூசகர் பெண்ணும் விளக்கமறியலில்

சொய்சாபுர துப்பாக்கிச் சூடு – வாகன சாரதி கைது