உள்நாடு

மஹிந்தானந்தவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

(UTV | கொழும்பு) – விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுத்துள்ளதாக அதன் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

உரம் வழங்கல் தொடர்பில் அரசாங்கத்தினால் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்தப் பிரச்சினை இவ்வாறு நீடிக்கப்பட்டால் அது உற்பத்திகளில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தும்.

எனவே அடுத்த வாரத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடி விவசாய அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என திஸ்ஸ அத்தநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

பிரியந்த குமாரவின் குடும்பத்துக்கு நட்டஈடு வழங்க பாகிஸ்தான் நடவடிக்கை

தேசபந்துக்கு விடுக்கப்பட்ட அழைப்பாணையை வலுவற்றதாக்கி மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு!

பாராளுமன்ற கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்