உள்நாடு

மஹிந்தானந்தவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

(UTV|கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்​கை எதிர்வரும் ஜூன் மாதம் 22 ஆம் திகதி வரையில் ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(17) உத்தரவிட்டுள்ளது.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கீழ் இயங்குகின்ற ஶ்ரீலங்கா சுதந்திர தொழிலாளர் காங்கிரசின் தலைவராக இருந்த போது அந்த தொழிற்சங்கத்துக்கு சொந்தமான 39 இலட்சம் ரூபா நிதியை தவறாக பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம் சட்டப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரதமர் தவிர்ந்த ஒட்டுமொத்த அமைச்சரவையும் பதவி விலகுகிறது

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களைத் தடுப்பதற்காக பொலிஸ் சிறப்புப் படைகள் – அமைச்சர் ஆனந்த விஜேபால

editor

மேல் மாகாணத்தில் 188 பேர் கைது