உள்நாடுபிராந்தியம்

மஸ்கெலியா நல்லதண்ணி தேயிலை தொழிற்சாலையில் தீ விபத்து

மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நல்லதண்ணி, லக்ஷபான தோட்டத்தின் தேயிலை தொழிற்சாலையில் இன்று (09) அதிகாலை 1 மணியளவில் தீ விபத்து ஒன்று ஏற்பட்டது.

தேயிலை தூள் உற்பத்திப் பிரிவில் ஏற்பட்ட தீ, தேயிலை இலைகள் சேமித்து வைக்கப்பட்டிருந்த சேமிப்பு அறைக்கும் பரவியதாகவும், பொட்டலம் கட்டப்பட்ட தேயிலைத் தூளும் பெருமளவில் எரிந்து நாசமாகியுள்ளது.

பரவிய தீ, தோட்ட மக்களால் ஏனைய பகுதிகளுக்கு பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது.

இருப்பினும், தோட்ட நிர்வாகம் திட்டமிட்டு தீயை மூட்டியதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

தீயினால் ஏற்பட்ட சேதம் இன்னும் மதிப்பிடப்படவில்லை. மேலும் தீயில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.

தேயிலை தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், தீ விபத்துக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.

நல்லதண்ணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

நாடு திரும்பிய இலங்கையர்களுக்கு வைரஸ் தொற்று இல்லை

பெலியத்த படுகொலை – இரு பெண்கள் கைது!

மறு அறிவித்தல் வரையில் மின் துண்டிப்பு இடம்பெறாது