சூடான செய்திகள் 1

மழை நிலைமையானது அதிகரித்து காணப்படும்…

(UTV|COLOMBO)-நாட்டில் காணப்படும் மழை நிலைமையானது சிறிது அதிகரித்து காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஏனைய பிரதேசங்களில் பி.ப. 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ, மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனி மூட்டம் காணப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

(வளிமண்டலவியல் திணைக்களம்)

 

Related posts

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் இன்று(11) முதல் ஏற்பு

கண்டிப் பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

இராணுவ தளபதியின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு