உள்நாடு

மழையுடன் கூடிய காலநிலை தொடரும்

(UTV | கொழும்பு) – நாட்டில் சப்ரகமுவ, மத்திய, மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று(10) வெளியிட்டுளள வளிமண்டலவியல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியாக குறிப்பாக வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாகவும் குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வலி நிவாரணி மாத்திரை உட்கொண்டால் உயிராபத்து ஏற்படலாம்

வீட்டுக்குள் புகுந்து பெண்ணின் கழுத்தை நெரித்துக் கொலை – மூவர் கைது

editor

´அவள் ஒரு நாடு, ஒரு தேசம், ஒரு உலகம்´