சூடான செய்திகள் 1

மழையுடனான காலநிலை…

(UTV|COLOMBO) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில், குறிப்பாக தென்மேற்குப் பகுதியில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் அடுத்த சில நாட்களில் சிறிது அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது

மேல், சப்ரகமுவ, மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய, ஊவா, வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

(வளிமண்டலவியல் திணைக்களம்)

 

 

 

Related posts

மண்சரிவு அபாய எச்சரிக்கை

CID இல் ஆஜரான நாமல் ராஜபக்ஷ எம்.பி

editor

சட்டவிரோத வெடிபொருட்களை ஒப்படைப்பதற்கான கால எல்லை நீடிப்பு