உள்நாடு

மலையக மக்களுக்காக நிதியம் தொடர்பில் ராதா கருத்து

(UTVNEWS | NUWARA ELIYA) -நுவரெலியா மாவட்டத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை ஓரிரு தினங்களில் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பட்டு வருவதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் ஆர்.எம்.பீ. புஷ்பகுமார தன்னிடம் தெரிவித்ததாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.  

நுவரெலியாவில் இன்று (27) நடைபெற்ற ஊடகவியவாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், பெருந்தோட்ட தொழிலாளர்கள் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவது தொடர்பாக இன்று காலை (27) நான் நுவரெலியா மாவட்ட செயலாளரிடம் தொடர்பு கொண்டு நிலைமைகளை தெளிவுப்படுத்திய பொழுதே அவர் என்னிடம் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பாக விளக்கமளித்தார்.

Related posts

தயாசிறி ஜயசேகரவும் இராஜினாமா

சில அரசியல்வாதிகளுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு

இன்று முதல் கடவுச்சீட்டு வழங்கல் வழமைக்கு