வகைப்படுத்தப்படாத

மலையகத்தில் பல்கலைக்கழக கல்லூரி அமைக்க இந்தியாவின் உதவி – கல்வி இராஜாங்க அமைச்சர்

(UDHAYAM, COLOMBO) – இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின்போது மலையக கல்வி அபிவிருத்தி , வீடமைப்பு தொடர்பான விடயங்கள் முன்வைக்கப்படும் என்று கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.

இந்த பேச்சுவார்த்தை ஹற்றன் டிக்கோயாவில் இடம்பெறும் ஆதார வைத்தியசாலை புதிய கட்டிடதொகுதி திறப்பு வைபவ நிகழ்வின்போது இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே கல்வி இராஜாங்க அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

மலையக கல்வி அபிவிருத்திக்கு இந்தியா பங்களிப்பு செய்யும் வகையில் கணிதம் விஞ்ஞானம் ஆங்கிலம் ஆகிய கற்கை நெறிகளை போதிக்க கூடிய உயர் கல்வித்தகைமை கொண்ட பட்டதாரிகளின் பங்களிப்பை பெற்றுக்கொள்வதற்கும் மலையக மக்களுக்கான வீடமைப்பை விரிவுபடுத்துதல் தொடர்பிலுமான கோரிக்கைகளை முன்வைக்கவுள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.

மலையகத்தில் பல்கலைக்கழக கல்லூரி ஒன்றை அமைப்பதற்கு இந்தியாவின் உதவியையும் நாம் கோரவுள்ளோம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

Related posts

Deshapriya wins bronze medal in Asia Para TT championships

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை

6 இஸ்லாமிய நாடுகளுக்கான தடை