வகைப்படுத்தப்படாத

மர்ம காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 79 ஆக உயர்வு

(UTV|INDIA)-உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த மாதம் கனமழை கொட்டித் தீர்த்தது. கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகினர். கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் இருந்து மீண்டுவராத உ.பி. மக்கள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஷாஜஹான்பூர், பாரியெல்லி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இந்த மர்ம காய்ச்சல் மக்களை பாதித்து வருகிறது. மர்ம காய்ச்சலினால் இதுவரை 42 பேர் உயிரிழந்திருந்தனர்.

இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெய்த கனமழையை தொடர்ந்து பரவி வரும் மர்ம காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 79 ஆக அதிகரித்துள்ளது.

மர்ம காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 79 ஆக அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக, மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேலாக மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பலியானோர் எண்ணிக்கை 79 ஆக அதிகரித்துள்ளது. பரேலியில் 24 பேரும், பாடனில் 23 பேரும், ஹர்டோயில் 12 பேரும், சீதாப்பூரில் 8 பேரும், பஹ்ரைச்சில் 6 பேரும், பிலிபிட் மற்றும் ஷாஹஜான்புரில் தலா 2 பேரும் பலியாகி உள்ளனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது!

ஜேர்மனிய தூதுவரை நாட்டில் இருந்து வெளியேற்ற தீர்மானம்…

Nine SSPs promoted to DIG