அரசியல்உள்நாடு

மருந்து தட்டுப்பாடு நிலவுவதாக சில ஊடகங்கள் போலி பிரசாரம் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

நாட்டில் மருந்து தட்டுப்பாடு நிலவுவதாக சில ஊடகங்கள் தெரிவிக்கும் கூற்றுக்களை, சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நிராகரித்துள்ளார்.

அரசியலில் தொடர்பு பட்டுள்ள சில வைத்தியர்கள் மருந்து நிறுவனங்களிடமிருந்து நிதி பெறுவதாகவும் நாட்டின் மருந்து விநியோகத்தை சீர்குலைக்க திரிபு படுத்தப்பட்ட செய்திகளை முன்னெடுப்பதாகவும் அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.

அந்த வகையில் சில ஊடகங்கள் நாட்டில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சித்தரித்து செய்திகளை வெளியிட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மறுமலர்ச்சியின் மனிதநேய யதார்த்தமான தேசிய மருந்துக் கொள்கையின் நிறுவனர் பேராசிரியர் சேனக பிபிலேவின் 48ஆவது நினைவு நாள், நேற்று (29) இலங்கை மன்றக்கல்லூரி கேட்போர் கூடத்தில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்

பொதுமக்களுக்கு மலிவு விலையில் தரமான மருந்துகளை விட்டுக் கொடுப்பதில் ஈடுபட்டுள்ள தரப்பினரை பலவீனப்படுத்த இலக்கு வைக்கப்பட்ட ஊடக பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இத்தகையவர்களின் முயற்சிகளின் நோக்கம் முறையான மருந்து விநியோகத்தை சீர்குலைத்து, அதை சுயநலத் தேவைக்காக பயன்படுத்துவதேயாகும்.

1977 செப்டம்பர் 29 அன்று கயானாவில் நடந்த பேராசிரியர் சேனக பிபிலேவின் மரணம் தொடர்பில் பலரும் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

முன்னர் சுகாதார அமைச்சர்களாக பதவி வகித்தவர்களும் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு, அவரது மரணம் தொடர்பில் கருத்துக்களை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கையின் புதிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்

editor

டிக்டோக் காதலனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்குவதற்காக சொந்த வீட்டில் நகைகளை திருடிய காதலி கைது

editor

ஷாபி சிஹாப்தீன் தொடர்பில் சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்கு அறிவிப்பு