சூடான செய்திகள் 1

மருத்துவ சபையின் புதிய தலைவர் பதவியை ஏற்க மறுப்பு

(UTV|COLOMBO)-விசேட மருத்துவர் பாலித அபேகோன், இலங்கை மருத்துவ சபையின் தலைவர் பதவியை நிராகரித்துள்ளார்.

உடல் நலத்தை கருத்தில் கொண்டு தான் அந்த பதவியை பொறுப்பேற்க மறுத்துள்ளார்.

மருத்துவ கட்டளை சட்டத்தில் உள்ள அதிகாரத்திற்கு அமைய முன்னாள் சுகாதார அமைச்சர் சமல் ராஜபக்ஸவால் இலங்கை மருத்துவ சபையின் புதிய தலைவராக விசேட மருத்துவர் பாலித அபேகோன் கடந்த மாதம் 26 ஆம் திகதி நியமிக்கப்பட்டார்.

பேராசிரியர் கொல்வின் குணரத்ன பதவியில் இருந்து விலகியதால் மருத்துவ சபையின் தலைவர் பதவி வெற்றிடமானது.

இந்நிலையிலேயே அந்த பதவிக்கு விசேட மருத்துவர் பாலித அபேகோன் நியமிக்கப்பட்ட நிலையில், தான் அந்த பதவியை ஏற்கப்போவதில்லை என இலங்கை மருத்துவ சபைக்கு கடிதம் ஒன்றை அனுப்பி தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

பிரதமர் தலைமையில் நாளை விஷேட கலந்துரையாடல்

மலையக ரயில் போக்குவரத்து தாமதம்

காங்கேசன்துறை சென்ற உத்தரதேவி