வகைப்படுத்தப்படாத

மருத்துவ கல்லூரி ஆரம்பிப்பதற்கு தேவையான பரிந்துரைகள் சமர்ப்பிப்பு

(UDHAYAM, COLOMBO) – மருத்துவ கல்லூரியை ஆரம்பிப்பதற்கு தேவையான தகமைகள் தொடர்பான பரிந்துரைகளை இலங்கை மருத்துவ சபை சுகாதார அமைச்சுக்கு சமர்ப்பித்துள்ளது.

இது தொடர்பாக இலங்கை மருத்துவ சபையின் பதிவாளர் டொக்டர் ரெரன்ஸ் டீ சில்வா தெரிவிக்கையில்   இந்த பரிந்துரைகளின் அடிப்படையில் தற்போது வர்த்தனமானி அறிவித்தலை வெளியிட சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்க முடியும் என்று தெரிவித்தார்.

ஏற்கனவே நடைமுறையில் இருந்த சில விடயங்களில் திருத்தங்களை மேற்கொண்டு இலங்கை மருத்துவ சபை பொது இணக்கப்பாட்டுக்கு வந்திருப்பதுடன் அது பற்றி சுகாதார அமைச்சுக்கு அறிவித்துள்ளது. இலங்கை மருத்துவ சபையின் தலைவர் பேராசிரியர் காலோ பொன்சேகாவின் பதவிக்காலம் எதிர்வரும் 30ம் திகதியுடன் நிறைவு பெறுகிறது. புதிய தலைவரை தெரிவு செய்வதா அல்லது தற்போதைய தலைவரின் பதவிக்காலத்தை நீடிப்பதா என்ற தீர்மானத்தை சுகாதார அமைச்சரே எடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.

பேராசிரியர் காலோ பொன்சேகாவின் பதவிக் காலம் கடந்த டிசம்பர் 31ம் திகதியோடு நிறைவடைந்திருந்த நிலையில் சுகாதார அமைச்சர் அதனை ஆறு மாதங்களுக்கு நீடித்திருந்தார் என்பது குறப்பிடத்தக்கது.

Related posts

Wellampitiya Factory employee in courts

அமெரிக்கா – ரஷ்யா பேச்சுவார்த்தை வெற்றி

வரலாற்றில் முதல் தடவையாக கல்வி அமைச்சில் தை பொங்கல் விழா