உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் மன்னார் மாவட்டத்தில் இன்று (6) காலை முதல் அமைதியான முறையில் இடம்பெற்று வருகின்றது.
மன்னார் மாவட்டத்தில் ஐந்து உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்கு பதிவுகள் இவ்வாறு இடம்பெற்று வருகின்றது.
மன்னார் நகர சபை ,மன்னார் பிரதேச சபை,நானாட்டான் பிரதேச சபை, முசலி பிரதேச சபை, மாந்தை மேற்கு பிரதேச சபை ஆகிய ஐந்து உள்ளூராட்சி மன்றங்களுக்குமான தேர்தல் வாக்குப்பதிவுகள் இவ்வாறு இடம் பெற்று வருகின்றது.
மன்னார் மாவட்டத்தில் 91,373 வாக்காளர்கள் இம்முறை வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 5 உள்ளூராட்சி மன்றங்களில் இருந்தும் 88 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர்.
மன்னார் நகர சபையில் 18 உறுப்பினர்களும்,மன்னார் பிரதேச சபையில் 23 உறுப்பினர்களும்,நானாட்டான் பிரதேச சபையில் 19 உறுப்பினர்களும்,முசலி பிரதேச சபையில் 19 உறுப்பினர்களும்,மாந்தை மேற்கு பிரதேச சபையில் 24 உறுப்பினர்களும் உள்ளடங்களாக கட்சி மற்றும் சுயேற்சைக் குழு சார்பாக 103 உறுப்பினர்கள் போட்டியிடுகின்றனர்.
மன்னார் மாவட்டத்தில் 114 வாக்களிப்பு நிலையங்களில்,வாக்களிப்புக்கள் இடம் பெற்று வருகின்றது.
வாக்களிப்பு நிலையம் மற்றும் வாக்கு எண்ணும் நிலையங்களுக்கும் உரிய பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-மன்னார் நிருபர் லெம்பட்