உள்நாடுபிராந்தியம்

மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த கணவன்

கம்பஹா, மீரிகம பொலிஸ் பிரிவின் ரெந்தபொல பகுதியில், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (18) குறித்த பெண் அவரது கணவரால் கொலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர் ரெந்தபொல பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவராவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த பெண்ணுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக இந்தக் கொலை நடைபெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சடலம் வத்துப்பிட்டிவல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மீரிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

நாட்டில் பரவியுள்ள பன்றிக் காய்ச்சலை தடுக்க அதிவிசேட வர்த்தமானி

editor

கொவிட் தொற்றுக்குள்ளாகும் அரச ஊழியர்களுக்கு இழப்பீடு

ஜனாதிபதி வேட்பாளர் யார்? நாமலின் பதில்