வகைப்படுத்தப்படாத

மனித உரிமை ஆணைக்குழுவின் அறிவுறுத்தலை இலங்கை எதிர்க்கின்றமைக்கு அமெரிக்கா அதிருப்தி

(UDHAYAM, COLOMBO) – யுத்தக்குற்றம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு வெளிநாட்டு நீதிபதிகளை உள்வாங்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் அறிவுறுத்தலை இலங்கை எதிர்க்கின்றமைக்கு, அமெரிக்கா அதிருப்தி வெளியிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கான அமெரிக்க பிரதிநிதி வில்லியம் ஜே மொஸ்டைசைர்ஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

யுத்த குற்ற விசாரணைகளுக்கு வெளிநாட்டு நீதிபதிகளை ஏற்கும் தீர்மானத்துக்கு எதிராக இலங்கை அரசாங்கம் அறிக்கை வெளியிடுகிறது.

இலங்கை அரசாங்கத்தின் இந்த செயற்பாடானது பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதிவழங்கல் தொடர்பில் சந்தேகத்தை எழுப்புகிறது.

எனவே, நீதித்துறை மீதான நம்பிக்கையை ஏற்படுத்த, இலங்கை அரசாங்கம் ஏற்கனவே வழங்கிய உறுதிமொழிகளை மதித்து நடக்க வேண்டும் என்று வில்லியம் ஜே மொஸ்டைசைர்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் குற்றம் புரிந்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையை இலங்கை சர்வதேசத்துக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் செயிட் அல் ஹுசைன் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த நம்பிக்கை நாட்டின் எதிர்காலத்துக்கு முக்கியமானதாகும்.

எனவே, உள்ளக பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள் இணைக்கப்பட வேண்டும் என்றும் ஹூசைன் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

டெங்கு காய்ச்சல் அவதானம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிகள் ஆரம்பம்

கொழும்பு -கொலன்னாவ மாநகர சபை   உத்தியோகபூர்வ முடிவுகள்.

Michael Jackson honoured on 10th anniversary of his death