அரசியல்உள்நாடு

மனிதத்தை வாழ வைக்கும் நீதியை நிலைநாட்டும் சகவாழ்வுக்கான போராட்டமே எம் வழிமுறை – நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் இம்ரான் மகரூப் எம்.பி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளைக்கொண்டாடும் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் என் மனம் கனிந்த பெருநாள் வாழ்த்துக்கள்

ஈதுக்கும் முபாரக் – தகப்பலல்லாஹு மின்னா வமின்கும் ஸாலிஹல் அஃமால்

மலரும் இப் புனிதப்பெருநாள் இம்மண்ணில் அமைதியையும் நிம்மதியையும் சுபீட்சத்தையும் சுமந்து வரவேண்டுமென பிரார்த்தின்றேன்.

அல்குர்ஆன் எமது வாழ்க்கை வழிகாட்டி என்ற நிலையை எவருக்காகவும் நாம் விட்டுக்கொடுக்கவும் மாட்டோம்.

மனிதத்தை வாழ வைக்கும் நீதியை நிலைநாட்டும் சகவாழ்வுக்கான போராட்டமே எம் வழிமுறை.

எல்லாவற்றுக்கும் மேலாக இறைதிருப்தியே எமது இலக்காக இருக்கின்றது.

இந்த உறுதியோடு இன்று எம்மை அச்சுறுத்தும் அசாதாரண சூழல், மனித உரிமை மீறல்கள், மத துவேஷங்கள், அத்துமீறல்கள் அனைத்தும் நீங்கி நம் நாடு எழுச்சி பெற இப்புனித நாளில் அல்லாஹ்வைப் பிரார்த்திகின்றேன்.

வலிகளோடு கடந்து போகும் காஸா உறவுகளின் வாழ்வில் வெற்றியையும் சந்தோஷத்தையும் ஏற்படுத்தவல்ல ஆரம்பத்தை இப்புனித நாளில் எல்லாம் வல்ல அல்லாஹ் அமைக்க வேண்டும் என்றும் இரு கரமேந்தி பிரார்த்திக்கின்றேன்.

அனைவருக்கும்
குல்லு ஆமின் வஅன்தும் பிகைர்

பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப்

Related posts

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து – ஒருவர் பலி

editor

இலங்கை விமானப்படைக்கு புதிய பதவி நிலை பிரதானி நியமனம்

editor

மேலும் 417 பேர் குணமடைந்தனர்