உள்நாடுபிராந்தியம்

மனநலம் பாதிக்கப்பட்டவர் தாக்கியதில் ஒருவர் பலி

நாகொடை, கம்மெத்தேகொட பகுதியில் ஒருவர் பொல்லினால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (10) பிற்பகல் நடந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நாகொடை, கம்மத்தேகொட பிரதேசத்தை சேர்ந்த 83 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.

தற்போதைய விசாரணையில் சந்தேக நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

சந்தேக நபரைக் கைது செய்வதற்காக நாகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

அன்று ஹிட்லர் செய்ததும் தவறுதான் – இன்று இஸ்ரேல் செய்வதும் தவறுதான்.

இளம் ஊடகவியலாளர் விபத்தில் சிக்கி பலி

editor

எரிவாயு விலை திருத்தம் தொடர்பாக இன்றும் கலந்துரையாடல்