அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

மத்திய வங்கி பிணைமுறி மோசடி – அர்ஜுன மகேந்திரனும் விரைவில் கைது – அமைச்சர் லால் காந்த

மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் நேரடியாக தொடர்புபட்டிருக்கும் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை சிங்கப்பூரிலிருந்து நாட்டிற்கு அழைத்து வருதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் லால் காந்த தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டில் அரசாங்கத்திற்கு மேலாக ஒரு அரசு செயற்படுகிறது. அத்துடன் குற்றங்களுக்கான ஒரு அரசும் செயற்படுகிறது.

அந்த குற்றங்களுக்கான அரசை இல்லாமல் செய்ய வேண்டும். அதற்கான செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அண்மையில் இந்தோனேஷியாவில் மேற்கொள்ளப்பட்ட திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவைச் சேர்ந்தவர்களின் கைது இதற்கு எடுத்துக்காட்டாகும்.

நாட்டுக்கு எதிராக குற்றங்களில் ஈடுபட்டவர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் அவர்களுக்கான தண்டனை வழங்கப்படுமென அமைச்சர் லால் காந்த தெரிவித்துள்ளார்.

Related posts

SLFP ஜனாதிபதி வேட்பாளராக விஜயதாச : மைத்ரிபால

முறையற்ற சொத்துக் குவிப்பு – CID இல் முன்னிலையாகுமாறு யோஷிதவுக்கு அழைப்பு

editor

பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு

editor