உள்நாடுவிசேட செய்திகள்

மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க வெளியிட்ட விசேட அறிவிப்பு

இலங்கையின் பொருளாதாரம் மீள் எழுச்சி பெறும் வேகம் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டதை விடவும் அடுத்த ஒரு வருடத்தில் முன்னைய நெருக்கடிகளை இலங்கை கடந்து செல்லுமென எதிர்பார்ப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனியார் ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார மறுசீரமைப்புகள் எதிர்பார்த்ததை விடவும் அதிக பெறுபேறுகளை வெளிப்படுத்தி வருகின்றன.

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு 4 வருடங்கள் செல்லுமென கணிப்பிடப்பட்டது.

எனினும் தற்போது அது 3 வருடமாக மாறியுள்ளதாக மத்திய வங்கி ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts

ரிஷாதின் கைதுக்கு எதிராக கரைத்துறைப்பற்று பிரதேச சபையில் தனி நபர் பிரேரணை

வெட்டுக்கிளிகளின் தாக்கத்தினால் வேள்விக்குறியாகும் விவசாயம்

75 கிராம் ஹெரோயினுடன் இருவர் கைது