உள்நாடு

‘மத்திய வங்கி ஆளுநரை பதவி நீக்கம் செய்ய அரசாங்கம் விரும்பவில்லை’

(UTV | கொழும்பு) – மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவை அந்தப் பதவியில் இருந்து நீக்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு இல்லை என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி ரோஹினி கவிரத்ன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“தற்போதைய மத்திய வங்கி ஆளுநரை பதவி நீக்கம் செய்ய எங்களுக்கு விருப்பம் இல்லை. அவர் முன்னாள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார். தற்போதைய ஜனாதிபதி அவரது பதவிக்காலத்தை நீட்டித்தார்.

மத்திய வங்கி ஆளுநரை பதவி நீக்கம் செய்ய முயல்வதாக எதிர்க்கட்சியினர் இந்த நாட்டுக்கு காட்ட முயற்சிக்கின்றனர். அவர்களுக்கு அப்படி ஒரு ஆசை இருக்கிறதா என்று தெரியவில்லை..” எனத் தெரிவித்திருந்தார்.

Related posts

பிரதமராகும் பசில் – பொதுஜன பெரமன கட்சிக்குள் பூகம்பம்

இன்றைய தினம் கொரோனா தொற்றாளர்கள் பதிவாகவில்லை

மேலும் 1,133 சந்தேகநபர்கள் கைது!