உள்நாடு

மத்திய வங்கியின் புதிய ஆளுநர் கடமைகளை பொறுப்பேற்றார்

(UTV | கொழும்பு) –   இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அஜித் நிவாட் கப்ரால் சற்று முன்னர் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அவர் இன்று முற்பகல் தனது நியமன கடிதத்தை ஜனாதிபதியிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

முன்னதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக பதவி வகித்த பேராசிரியர் W.D. லக்ஷ்மன் நேற்று தமது பதவியிலிருந்து விலகியிருந்தார்.

இந்நிலையில், மத்திய வங்கியின் புதிய ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts

ஹரக் கட்டாவை கொலை செய்ய சதித்திட்டம் – பத்திரிகையாளர் போல் மாறுவேடமிட்டிருந்த துப்பாக்கிதாரி கைது

editor

குசல் மென்டிஸ் வைத்தியசாலையில் அனுமதி

 ரணில், சஜித் இணைய வேண்டும் – வடிவேல் சுரேஷ்